விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் காலை 9.30 மணி நிலவரப்படி 12.94% வாக்குகள் பதிவு

எழுத்தின் அளவு: அ+ அ-

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9.30 மணி நிலவரப்படி, 12 புள்ளி 94 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்ததை அடுத்து, இத்தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக, 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. வாக்குச்சாவடி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

அனைத்து வாக்குப்பதிவு மையங்களும் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. தேர்தல் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்களும், பாதுகாப்பு பணியில் 2 ஆயிரத்து 800 காவலர்களும் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 100க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் காலை 9.30 மணி நிலவரப்படி, 12 புள்ளி 94 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Night
Day